செவ்வாய், 31 மார்ச், 2009

மனம் வேண்டும்

கவிதை வேண்டும் கடவுள் வேண்டும்
சாதல் இல்லா வாழ்வும் வேண்டும்
காலம் முழுதும் காதல் வேண்டும்

மனம்கவர் மங்கை அருகே வேண்டும்
மாலை யானால் அளவாய் மதுவும் வேண்டும்
கண்மூடும் கணப் பொழுதில் தூக்கம் வேண்டும்
பற்றும் வேண்டும் பாசம் வேண்டும்
பற்றற்று வாழப் பழக வேண்டும்
பந்த பாசம் எல்லாம் ஓர்நிறை
பாசம் இழந்தால் பந்தம் போனால்
மயிரது உதிர்ந்த மனமது கொண்டு
வாழ்வில் இன்பம் காணவும் வேண்டும்
உயிரிகள் எல்லாம் நமதெனக் காணும்
அன்பினில் தோய்ந்திடும் இன்பம் வேண்டும்

தனுஷ்

யாருக்கும் வெட்கமில்லை !

எதைத் தெரிந்தும் எதுவும் ஆக போவதிலை.
தெரிந்தும் தெரியாமலும் புரிந்தும் புரியாலும்
அவரவர் போக்கு அவரவர் வசதி
என்றோ விலை போக பழகிவிட்டார்கள்.
மேலே இருப்பவர்களுக்கு கோடிகள் எல்லை
இவர்களுக்கு பிரியாணி, கால் பாட்டில் மது எல்லை.
இதில் யாருக்கும் வெட்கமில்லை.

தனுஷ்.