எனது கடவுள்
எனக்குள் இருக்கும் பிசாசிற்குத்
தீனி நான்தான்
எனக்குள் இருக்கும் கடவுளுக்கு
அருந்தக் கொடுப்பேன்
எனது இரத்தத்தை
இறந்த காலம்
அசைபோடுவதற்கும்
நிகழ்காலம்
அனுபவிப்பதற்கும்
இருக்கும் போது
எதிர்காலம் மட்டும் ஏன்
இருளைப் போர்த்துக் கொண்டிருக்கிறது
என்று கடவுளிடம் கேட்டேன்
அப்போதுதான்
என் இருப்பு உனக்கும்
புரியும் என்றார்
கடவுளின் உருவம்
டிராகுலாவின்
பற்களாக இருட்டில்
இரத்தம் சொட்டியது
தனுஷ்
வாழ்த்துகள். பின்புல நிறத்தை விருப்பம் இருந்தால் மாற்றி விடுங்கள். படிப்பவர்களுக்கு உறுத்துதல் இருக்கக்கூடாது.
பதிலளிநீக்கு