நான் கற்களை வீசி கடலில் சலனத்தை ஏற்படுத்த
நினைக்கும் போதெல்லாம் கவிதை எழுதுகிறேன்
எந்தக் காரணமும் இன்றி அன்றொருவன் இரயில்
அடித்துத் துவைத்தானே அவனை நினைக்கும் போதெல்லாம்
கவிதைகளை எழுதி எழுதிக் கிழிக்கும் அவலம் நேர்கிறது
எனது அழுகைக்கான காரணத்தை அறிய முற்படும் போதெலாம்
அவை கவிதைகளாகவே உருக்கொள்கின்றது
துக்கங்களைச் சுமப்பது என்பது கவிதைகளாக
உருக்கொண்டு ஆறுதல் அளிக்கிறது
எல்லோரும் அவரவர் போக்கில்
என்மீது மோதும் உணர்வின்றி நகர்கிறார்கள்
அவர்கள் இடித்துச்செல்லும் தடம் யாவும்
காயங்களாய் நிலைத்துச் சீழ் வடிக்கும்
வலி தாளாது நான் அழுகையை வெளிக்கொணராத
பொழுதுகளில் தீவிரமாக கவிதை வெளிப்படுகிறது
கவிதை துக்கத்தின் வடிகால் ஆறுதல்
அரவணைத்துத் தேம்பலை மடிபுதைத்து
அழுவதற்குள் நான் இழைஇழையாய்
வெற்றுவெளியில் கரைந்து மறைந்தும்
போகிறேன்
தனுஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக