வெள்ளி, 10 ஏப்ரல், 2009

காதல்-அறிமுகம்

அறிமுகமா !
காதலுக்கா !
வெளியே எங்கும் சொல்லாதீர்கள்
காதல்தான் அனைத்துமே
காதல்தான் ஆன்மா
காதல்தான் கடவுள்
காதல்தான் எங்கும் நீக்கமற நிறைந்த பொருள்
காதலை அறிந்துகொண்ட பினதான்
நான் மனிதன் என்ற உணர்வினைக் கற்றேன்
நீ இன்றி ஒரு அணுவும் இல்லை
அசைவும் இல்லை
நீதான் எல்லாமே
உன் நினைவே என்னை உத்வேகப்படுத்துகிறது
நீயே அருந்தும் அமுதம்
நீயே அட்சயப் பாத்திரம்
நீயே அனைத்திற்கும் முதல்
நீயே அனைத்திற்கும் எல்லை
நீதான் மனித இனத்தின் மறு உற்பத்திக்கு
ஆதாரமாகிறாய்
காதல் என்ற மொழி ஒன்றே போதும்
மானுடம் பிழைத்துக் கொள்ளும்
காதலுக்கு மறுபெயர் சூட்டினால்
அன்பு என்றும் அன்னை என்றும்
மாறுகிறது.
அன்பே என்று அணைக்கக் கன்னியும்
அம்மா என்று அழைக்க அன்னையும்
காதலின் கடவுள்கள்
நான் என்னை அறிந்து கொள்வது என்பது
காதலை அறிந்து கொள்வதிலிருந்துதான்
தொடங்குகிறது
எல்லாமே காதல் என்றக்
கொடியினை உயர்த்திப் பிடிப்போம் வாரீர் !


தனுஷ்

வியாழன், 9 ஏப்ரல், 2009

நட்பும் மழையும்

நீ என்று வருவாய் தெரியாது
உன் அன்பின் குளுமை இன்னும்
என் உதடுகளில் ஈரமாகவே உள்ளது.
உனக்கான காத்திருப்பு கவித்துவமானது
எல்லா நொடிகளிலுமே
உன் நினைவு
சுகந்தமாக என்னைச் சுற்றி வருகிறது.
நான் வாழ்வதின் அர்த்தம் நீ
எனக்காக எதுவும் இல்லை என்று
நினைக்கும் போதெல்லாம் நீ
இருப்பதை நினைக்கும் போது
வாழ்வின் மீதான பிடி இறுகிப்போகிறது.
அர்த்தமற்ற பயணம் தொடங்கிய இடத்திலேயே
என்றோ நின்று போனதை
காலங்கடந்த பின் நினைக்கும் போதெல்லாம்
உன் நினைவு மட்டும்தான் ஆறுதல்
பயணத்திற்கான தயாரிப்பே உன்னை
மையமாக்கித்தான்
என்று வருவாய் ஒரு மழை போல
குடைகளை தூக்கி எறிந்து விட்டு
வீதியில் உன்னில் நனைவதற்காக
காத்திருக்கிறேன்

தனுஷ்

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

நட்பில் ஊடல்

நட்பில் ஊடல்

அவளது நட்பில்
ஆனந்தம் இருந்தது
அவளது விசாலமான
அறிவும் தெளிவும்
சுதந்திரத்தைத் தந்திருந்தது
ஒரு வருடப் பழக்கத்தில்
ஒரே ஒரு முறைதான்
அவனை முத்தமிட்டிருக்கிறாள்
முத்தமிட்ட அன்றொடு முடிந்து
போனது நட்பு
இன்றைக்கும் அவனைப் பார்த்தால்
புன்னகைக்கிறாள்
அவனுக்குத்தான் கடன்கள்
அடிக்கடி ஞாபகம் வந்துத்
தொலைகிறது
அவனே கேட்டு விட்டான்
நீ முன்பு மாதிரி இல்லை
அதற்கு அவள் சொன்னாள்
ஊடல் கூடாதா
இந்த முறை உதட்டில்
விரலை வைத்து அழுத்தினாள்
வெகு தூரம் போய் விட்டாள்
இனி கடன்காரி அவள்
வராமல் இருந்தாலும் பரவாயில்லை
என்று நினைக்கத் தொடங்கினான்

தனுஷ்