வெள்ளி, 10 ஏப்ரல், 2009

காதல்-அறிமுகம்

அறிமுகமா !
காதலுக்கா !
வெளியே எங்கும் சொல்லாதீர்கள்
காதல்தான் அனைத்துமே
காதல்தான் ஆன்மா
காதல்தான் கடவுள்
காதல்தான் எங்கும் நீக்கமற நிறைந்த பொருள்
காதலை அறிந்துகொண்ட பினதான்
நான் மனிதன் என்ற உணர்வினைக் கற்றேன்
நீ இன்றி ஒரு அணுவும் இல்லை
அசைவும் இல்லை
நீதான் எல்லாமே
உன் நினைவே என்னை உத்வேகப்படுத்துகிறது
நீயே அருந்தும் அமுதம்
நீயே அட்சயப் பாத்திரம்
நீயே அனைத்திற்கும் முதல்
நீயே அனைத்திற்கும் எல்லை
நீதான் மனித இனத்தின் மறு உற்பத்திக்கு
ஆதாரமாகிறாய்
காதல் என்ற மொழி ஒன்றே போதும்
மானுடம் பிழைத்துக் கொள்ளும்
காதலுக்கு மறுபெயர் சூட்டினால்
அன்பு என்றும் அன்னை என்றும்
மாறுகிறது.
அன்பே என்று அணைக்கக் கன்னியும்
அம்மா என்று அழைக்க அன்னையும்
காதலின் கடவுள்கள்
நான் என்னை அறிந்து கொள்வது என்பது
காதலை அறிந்து கொள்வதிலிருந்துதான்
தொடங்குகிறது
எல்லாமே காதல் என்றக்
கொடியினை உயர்த்திப் பிடிப்போம் வாரீர் !


தனுஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக