நீ என்று வருவாய் தெரியாது
உன் அன்பின் குளுமை இன்னும்
என் உதடுகளில் ஈரமாகவே உள்ளது.
உனக்கான காத்திருப்பு கவித்துவமானது
எல்லா நொடிகளிலுமே
உன் நினைவு
சுகந்தமாக என்னைச் சுற்றி வருகிறது.
நான் வாழ்வதின் அர்த்தம் நீ
எனக்காக எதுவும் இல்லை என்று
நினைக்கும் போதெல்லாம் நீ
இருப்பதை நினைக்கும் போது
வாழ்வின் மீதான பிடி இறுகிப்போகிறது.
அர்த்தமற்ற பயணம் தொடங்கிய இடத்திலேயே
என்றோ நின்று போனதை
காலங்கடந்த பின் நினைக்கும் போதெல்லாம்
உன் நினைவு மட்டும்தான் ஆறுதல்
பயணத்திற்கான தயாரிப்பே உன்னை
மையமாக்கித்தான்
என்று வருவாய் ஒரு மழை போல
குடைகளை தூக்கி எறிந்து விட்டு
வீதியில் உன்னில் நனைவதற்காக
காத்திருக்கிறேன்
தனுஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக