ஞாயிறு, 2 ஜனவரி, 2011

பேசாதீர்

எல்லோரும் மௌனமாக
இருப்பதையே விரும்புகிறார்கள்
பேசினால் தப்பித் தவறி
உண்மைகள்
எதிர்கருத்துக்கள்
வெளியாகி விடலாம்
என்று அச்சமுறுகிறார்கள்
இயல்பாக இருப்பதில்
மௌனமும் இயல்புதான்
எனினும்
துகில் உறியப்படுதல்
கண்டும்
மௌனமாக இருப்பதே
சாலச் சிறந்தது
என்கிறார்கள்
எல்லோரும் மௌனமாக
இருப்பதே நீதி என்றும்
சொல்கிறார்கள்
விதிகள் இருக்கிறது
உனக்கேன் வீண் பேச்சு
வாயடைக்கச் சொல்கிறார்கள்
பேசுவதால்
எந்தப் பயனும் இல்லை என்கிறார்கள்
பேசி எதற்கு நாம் தண்டிக்கப்பட வேண்டும்
எனவும் பயமுறுத்துகிறார்கள்

தனுஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக