ஞாயிறு, 9 ஜனவரி, 2011

கவிதை



உயிரின் கவிதை நாம்

நமக்குள்தான் எத்தனை
நெருக்கம்
முகமுறிவு
கருத்து வேறுபாடு
நாம் சண்டையிடுவதற்கு
எந்த காரணமும் தேவையில்லை
எதையும் பேசி தீர்க்கலாம்
என்பதுதான் முதல் அபத்தம்
உணர்வுகளோடு பேசியவர்கள் நாம்
மொழியை கடந்தவர்கள்
குறிப்பால் அனைத்தையும்
உணர்ந்து ஆலிங்கனத்தில்
திளைத்தவர்கள்
எங்கிருந்தோ நெருப்பு
கண்ணுக்குத் தெரியாமல்
உள்ளே நுழைந்து விட்டது
சண்டையே தொடங்கவில்லை
அதற்குள் அந்நியர்கள்
மகிழ்ச்சியில் குதூகலிக்கிறார்கள்
நீ பிரிவைப் பற்றிப் பேசுகிறாய்
நான் எங்கிருந்தது நமக்குள்
நட்பு என்கிறேன்
உன் மன அதிர்வு கண்ணிமைகளில்
கண்ணீராக பெருகுகிறது
நீயும் நானும்
உடலும் உயிருமல்லவா
என்கிறேன்
ஒரே பொருள் பிரிக்க முடியாது
அல்லவா என்கிறேன்
நீ என்னை
நீங்கா ஆலிங்கனம் செய்கிறாய்
உயிரின் கவிதை நாம்

தனுஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக