ஞாயிறு, 9 ஜனவரி, 2011

கவிதை

இரண்டரை வயதும் கிண்டர் கார்டனும்

அவனுக்கு காலை
எட்டு மணி ஆனால்
பயம் சூழ்ந்து கொள்கிறது
தாயின் கழுத்தை இறுக்கிப்
பிடித்துக் கொள்கிறான்
அவள் அவனுக்கு
அங்கு செல்ல வேண்டிய
அவசியத்தை கூறுகிறாள்
அவன் பெரியவனாவதற்கு
தான் இது என்றும்
அவனை அன்போடு
விலக்கி அனுப்புகிறாள்
அவனுக்கு எதுவும் புரியவில்லை
அங்கே பக்கத்திலிருப்பவனைப்
பார்த்தாலே பயம்
அவன் இவனை அடிக்கிறான்
இவனும் ஒரு கட்டத்தில்
அடி தாளாது திருப்பி அடிக்கிறான்
அவன் அடித்ததில்
இவன் முகத்தில் கீறல்
இரத்தம் கோடிட்டது
இவன் அவனைக் கடிக்கிறான்
இருந்தாலும்
மீண்டும்
அம்மாவும் அப்பாவும்
ஏன் இப்படி இந்த
நரகத்திற்கு அனுப்புகிறார்கள்
இன்று காலை
எட்டு மணி
ஆயாவின் கழுத்தை
இறுக கட்டிக் கொள்கிறான்
அப்பாவும் அம்மாவும்
சிரிக்கிறார்கள்
இன்று ஞாயிற்றுக் கிழமை
எங்கும் போக வேண்டாம்
இவன் மகிழ்ச்சியில்
அப்பாவைக் கட்டிக் கொள்கிறான்

தனுஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக